நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலச்சரிவு: தாமான் யுனைடெட்டில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவு

கோலாலம்பூர்:

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தாமான் யுனைடெட்டில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

செபூத்தே, தாமான் யுனைடெட்டில் உள்ள 104 புளோக்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சுமார் 60 மீட்டர் நீளமுள்ள சரிவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தனது துறைக்கு காலை 11.02 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என்று செபூத்தே தீயணைப்பு, மீட்பு நிலைய தலைவர் அர்மடான் மஹத் கூறினார்.

சம்பவ இடத்தில் ஒரு கார் புதைந்து கிடந்தது. மற்றொரு கார் நிலச் சரிவில் சிக்கியது.

நிலச்சரிவு அருகிலுள்ள குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலும் நுழைந்தது.

இதைத் தொடர்ந்து, தொடர்ந்து நிலம் நகர்வு மற்றும் கனமழை காரணமாக 104 வீடுகள், அருகிலுள்ள வளாகங்களை உள்ளடக்கிய இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset