செய்திகள் மலேசியா
முதன் முறையாக ஆயிரக்கணக்கானோர் திரண்ட S.I.R.A.T இளைஞர் உச்சி மாநாடு
பட்டர்வொர்த்:
MUKMIN (Majlis Ukwah Indian Muslim Malaysia), மலேசிய முஸ்லிம் இளைஞர் சங்கமும் (MMYC) இணைந்து ஏற்பாடு செய்த S.I.R.A.T இளைஞர் உச்சி மாநாடு பட்டர்வொர்த்தில் நேற்றிரவு வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.
இலட்சிய நோக்கத்திற்காக ஆளுமைமிக்க தலைமுறையை உருவாக்கும் இலக்கோடு நடத்தப்பட்ட இந்த ஒரு நாள் மாநாடு, வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து நம்பிக்கைக்குரிய இந்திய முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றுகூடினர். அவர்களை ஒன்றிணைத்து, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமை, நெறிமுறை தொழில்முனைவு, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக ஈடுபாட்டின் அடிப்படையில் மாற்றத்தக்க உரையாடல்களை கொண்டு இந்த மாநாடு உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு பங்கேற்பாளருக்குள்ளும் மறைந்திருக்கும் திறனை வெளிக் கொண்டு வர வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் உச்சிமாநாடு வடிவமைக்கப்பட்டது
எதிர்காலத் தலைவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த உச்சிமாநாடு ஒரு வினையூக்கியாகச் செயலாற்றி உள்கது என்றால் அது மிகை அல்ல.
இளைஞர்கள் தங்கள் உள்ளார்ந்த தலைமைத்துவ திறன்களைத் தழுவி நேர்மறையான மாற்றத்தின் முகங்களாக மாற இந்த மாநாடு ஊக்கமளித்தது.
அதிகாரப்பூர்வ முக்கிய அமர்வுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் என்று இளைய சமூகத்திற்கு வேண்டிய அத்தனை அம்சங்களும் இந்த மாநாட்டில் இடம் பெற்றிருந்தது.
பங்கேற்பாளர்கள் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் வழிநடத்த ஊக்குவிக்கப்பட்டார்கள்.
இளைஞர்களை மேம்படுத்துவதோடு, புதுமை, முன்னேற்றம், எதிர்காலத்தை வடிவமைக்க இங்கு தூண்டப்பட்டனர். மேலும் பங்கேற்பாளர்களின் அறிவு, நடைமுறை திறன்கள் என்று வெவ்வேறு தகவல்களை அவர்கள் இங்கு ஈட்டினர்.
இந்த உச்சிமாநாடு தனிப்பட்ட வளர்ச்சி, புத்திசாலித்தனம், புதிய யோசனைகளை உருவாக்குவதற்கான வலுவான தளத்தை வழங்கி இருக்கிறது.
மாபெரும் ஏற்பாட்டை மிகத் துல்லியமாக ஏற்பாடு செய்த முக்மின் அமைப்பினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 23, 2025, 3:19 pm
மலேசியா-இந்தியா உறவுகளை வலுப்படுத்த டத்தோஸ்ரீ அன்வாரும் மோடியும் உறுதி கொண்டுள்ளனர்
November 23, 2025, 3:16 pm
பிரச்சினைகளை எதிர்கொண்டு சவால்களை சமாளித்தால் முன்னேற வாய்ப்பு உண்டு: குலசேகரன் வலியுறுத்து
November 23, 2025, 3:15 pm
சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த கடுமையான நடவடிக்கை அவசியம்: டத்தோ லோகபாலா
November 23, 2025, 3:14 pm
வரலாற்றுப்பூர்வ கிந்தா இந்தியர் சங்கத்திற்கு பேரா ராஜா மூடா வருகை அளித்தார்
November 23, 2025, 3:13 pm
யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளை மீண்டும் அமுல்படுத்துகள்: கல்வி அமைச்சுக்கு பிபிபி கட்சி வேண்டுகோள்
November 23, 2025, 2:46 pm
தாய்லாந்து, கம்போடியா எல்லைப் பிரச்சினையில் மலேசியா தலையிடாது: பிரதமர் அன்வார்
November 23, 2025, 1:13 pm
மோயோக் தொகுதி வேட்பாளர் ரெமிஸ்டா ஜிம்மி சபா மக்களின் குரலாக ஒலிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
November 23, 2025, 1:07 pm
