நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனமழையை தொடர்ந்து ஷாஆலம் ஸ்ரீ மூடா சுற்றுவட்டாரம் தினசரி வெள்ள கண்காணிப்பில் உள்ளது: தீயணைப்புப்படை

ஷாஆலம்:

கனமழையை தொடர்ந்து ஷாஆலம் ஸ்ரீ மூடா சுற்றுவட்டாரம் தினசரி வெள்ள கண்காணிப்பில் உள்ளது என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

பெஸ்டாரி ஜெயா, ஷாஆலம், புக்கிட் ஜெலுடோங் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் இந்த கண்காணிப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் வானிலை அறிக்கைகள் அடிப்படையில் இந்த பணி தொடரும்.

சிலாங்கூரின் கிள்ளான், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட், சிப்பாங், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலன், மலாக்கா, பகாஆங் (பெரா) மாநிலங்களில் தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை, பலத்த காற்று வீசும் என்று மெட் மலேசியா எச்சரிக்கை விடுத்தது.

பருவமழை மாற்றம் காரணமாக நாடு முழுவதும் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset