நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் - ஜோகூர் மின்-ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்

ஜோகூர் பாரு: 

கோலாலம்பூர் - ஜோகூர் இடையே மின்-ரயில் சேவை அடுத்த மாதம் டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் (Anthony Loke) அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கட்டங்கட்டமாக பாடாங் பெசார் (Padang Besar), பட்டர்வொர்த் (Butterworth) ஆகிய பகுதிகளுக்கும் ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

தொலைவிலுள்ள பகுதிகளுக்கு நாள்தோறும் இரண்டு ரயில் சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜொகூர் - கோலாலம்பூர் இடையே கூடுதல் ரயில் சேவைகள் இயக்ககப்படும் என்று லோக் தெரிவித்தார்.

ஜொகூர் - கோலாலம்பூர் ஒருவழிப் பயணம் சுமார் 3.5 மணி நேரம் முதல் 4.5 மணி நேரம் வரையாகலாம்.

விமானச்சீட்டு விலையைவிட ரயில்சீட்டின் விலை குறைவாக இருக்கும் என்று அவர் உறுதி கூறினார்.

மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டர் (Sultan Ibrahim Sultan Iskandar) புதிய ரயில் சேவையை அடுத்த மாதம் 11ஆம் தேதி ஜொகூரில் தொடங்கி வைப்பார்.

அந்த ரயில் சேவை 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு 2.14 பில்லியன் டாலர் செலவில் அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset