நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாளை செவ்வாய்க்கிழமை வரை பலத்த காற்று, கனமழை தொடரும்: மெட் மலேசியா எச்சரிக்கை

கோலாலம்பூர்:

மலாக்கா நீரிணையில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது இன்று முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை தீபகற்ப மலேசியாவின் வடக்கு, மேற்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை, பலத்த காற்று, கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது தீபகற்பத்தின் வடக்கு நீர்நிலைகளுக்கு அருகில் 5.4°N, 98.3°E இல் அமைந்துள்ள இந்த மண்டலம் கிட்டத்தட்ட நிலையாக உள்ளது. 

மேலும் 36 மணி நேரத்திற்குள் வங்காள விரிகுடாவை நோக்கி வடமேற்கே நகரும் என்று வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset