நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திரா காந்தி வழக்கை 6 மாதத்தில் தீர்க்க வேண்டும்; இல்லையென்றால் குலசேகரன் ராஜினாமா செய்ய வேண்டும்: நரன் சிங்

கோலாலம்பூர்:

இந்திரா காந்தி வழக்கை 6 மாதத்தில் தீர்க்க வேண்டும். இல்லையென்றால் குலசேகரன் ராஜினாமா செய்ய வேண்டும்.

கெராக்கான் கட்சியின் துணைத் தலைவர் வழக்கறிஞர் நரன் சிங் இந்த சவாலை விடுத்தார்.

குலசேகரன் தற்போது பிரதமர் துறையின் (சட்டம், நிறுவன சீர்திருத்தம்) துணையமைச்சராக பதவி வகிக்கிறார்.

இதனால் அவர் இந்திரா காந்தி வழக்கை ஆறு மாதங்களுக்குள் தீர்க்க வேண்டும். தவறினால் குலசேகரன் ராஜினாமா செய்ய வேண்டும்.

16 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த அவரது மகள் பிரசன்னா திக்ஸாவுடன் இந்திராவை மீண்டும் இணைக்கும் முயற்சிகளைக் கையாள்வதில் ஒரு வழக்கறிஞராகவும் அவர் தோல்வியடைந்துவிட்டார்.

மூன்று வாரங்களுக்குள் இந்திராவுக்கும் போலிஸ்படை தலைவர் காலித் இஸ்மாயிலுக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாக குலசேகரன் அளித்த வாக்குறுதியைப் பற்றி கருத்து தெரிவித்த நரன், அதை ஒரு வெற்று வாக்குறுதி என்று விவரித்தார்.

நீங்கள் சட்டத் துணை அமைச்சர். நீங்கள் கூட்டங்களை ஏற்பாடு செய்யாமல், உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தை ஆறு மாதங்களுக்குள் தீர்க்க ஐஜிபிக்கு குலசேகரன் உத்தரவிட வேண்டும். 

அவர் தோல்வியுற்றால், அவர் துணை சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். குலசேகரனும் ஜசெகவும் எதிர்க்கட்சியில் இருந்தபோது இந்திராவின் தலைவிதி குறித்து உறக்கக் கூவினர்

ஆனால் இப்போது அரசாங்கத்தில் இருந்தாலும் ஒரு தீர்வைக் கொண்டு வரத் தவறிவிட்டனர்.

குலசேகரன் அமைச்சராவதற்கு முன்பே இந்திராவின் போராட்டம் தொடங்கியதாக அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset