நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

130 சிறந்த எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் கல்வி உதவி நிதி: டத்தோஸ்ரீ ரமணன் வழங்கினார்

சுங்கைபூலோ:

சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் மொத்தம் 130 சிறந்த எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் ஆரம்பகால கல்வி உதவியை பெற்றனர்.

உயர்கல்வி கூடங்களில் இடம் பெற்ற மொத்தம் 130 மாணவர்களுக்கு 50,750 ரிங்கி கல்வி உதவி நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்தத் தொகையில் 38,500 ரிங்கிட் பேங்க்ரக்யாட்டால் வழங்கப்பட்டது.

மேலும் 12,250 ரிங்கிட் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது.

2024 முதல் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்கள், குடும்பங்கள், ஏழைக் மக்கள் உட்பட 4,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பேங்க் ரக்யாட்,  பேங்க் ரக்யாட் அறவாரியம் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ரிங்கிட்டை விநியோகித்துள்ளது.

இந்த சிறந்த வெற்றிக்காக சுங்கைபூலோவின் அனைத்து குழந்தைகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இதை தவிர்த்து சுங்கைபூலோவில் உள்ள மாணவர்களின் நலனுக்காக பல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பு அளித்ததற்காக பேங்க் ரக்யாட்,  பேங்க் ரக்யாட் அறவாரியத்திற்கு எனது நன்றி.

இதுபோன்ற முயற்சிகள் நமது குழந்தைகளின் எதிர்காலத்தை உயர்த்தி, மக்களின் நல்வாழ்வை வலுப்படுத்துகின்றன.

தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset