நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாலை 3 மணிக்கு கெடா ஆற்றில் கார் கவிழ்ந்தது: நிசான் அல்மேரா ஓட்டுநர் உயிரிழந்தார் 

ஜித்ரா:

இன்று அதிகாலை, சாங்லூனில் உள்ள தாமான் ஜெலுடோங்கில், தான் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் சறுக்கி ஆற்றில் விழுந்தது. அதில் ஓட்டுநர் மாண்டார்.

உயிரிழந்தவர் புக்கிட் காயு ஹித்தாமின் கம்போங் படாங் 1 ஐச் சேர்ந்த முஹம்மது ஃபைஸ் ஜைனல் (36) என குபாங் பாசு காவல் துறைத் தலைவர் முஹம்மது ரட்ஸி அப்துல் ரஹீம் கூறினார்.

அதிகாலை 3.07 மணிக்கு சம்பவம் குறித்த புகாரைப் பெற்ற பிறகு, போலீஸ் ரோந்து கார் (MPV) பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

“பாக் அண்டக்கின் நாசி கஞ்சா கடைக்கு அருகில் உள்ள சாங்லூனில் உள்ள தாமான் ஜெலுடோங்கில் ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்து இருந்தது. அதில் ஓட்டுநர் சிக்கி இருந்தார்.

“தீயணைப்பு வீரர்கள், ஒரு ஆம்புலன்ஸ் அதிகாலை 5.33 மணிக்கு வந்து, நிசான் அல்மேரா காரும் அதன் ஓட்டுநர் இறந்து கிடந்ததைக் கண்டனர். "உடல் ஜித்ரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது," என்று அவர் தெரிவித்தார்.

கார் ஆற்றில் விழுவதற்கு முன்பு சறுக்கி சென்றதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset