நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்து, கம்போடியா எல்லைப் பிரச்சினையில் மலேசியா தலையிடாது: பிரதமர் அன்வார்

ஜோகன்னஸ்பர்க்:

தாய்லாந்து, கம்போடியா எல்லைப் பிரச்சினையில் மலேசியா ஒருபோதும் தலையிடாது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக தாய்லாந்தின் விவகாரங்களில் தான் தலையிடுவதாக அந்நாட்டில் சிலர் கூறும் குற்றச்சாட்டுகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கிறேன். குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.

விசாரணைக்கான தீர்மானம் இல்லாமல் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சையைத் தீர்க்க உதவுவதில் மலேசியாவின் பங்கைப் புரிந்து கொள்ளுமாறு தன்னை விமர்சிப்பவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு அண்டை நாடு குறித்தான  சர்ச்சையைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்.

ஆனால் நாங்கள் இதில் ஈடுபடவில்லை.
அவர்கள் ஒரு தீர்வை எட்டுவதற்கு உதவ மட்டுமே நாங்கள் உதவுகிறோம். 

அவர்கள் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் எந்த குறிப்பிட்ட பரிந்துரைகளையும் வழங்கவில்லை.

அவர்கள் ஒரு தீர்வை எட்டுவதற்கு உதவ மட்டுமே நாங்கள் உதவுகிறோம். 

அவர்கள் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் எந்த குறிப்பிட்ட பரிந்துரைகளையும் வழங்கவில்லை.

நாங்கள் அவர்களின் இராணுவத் தலைவர்களை மட்டுமே ஒன்றிணைக்கிறோம்.
நான் இரு பிரதமர்களையும் தொடர்பு கொண்டு விவாதிக்கச் சொன்னேன்.

நிச்சயமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவர்களுடன் விவாதித்துள்ளார்.

மேலும் மலேசியா ஒரு நண்பராகக் கருதப்படுவதால் இரு தரப்பினருடனும் நான் தொடர்பில் இருக்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset