நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளை மீண்டும் அமுல்படுத்துகள்: கல்வி அமைச்சுக்கு பிபிபி கட்சி வேண்டுகோள்

கோலாலம்பூர்:

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான யூபிஎஸ்ஆர்,  படிவம் மூன்றாம் மாணவர்களுக்கான பிஎம்ஆர் தேர்வுகளை கல்வியமைச்சு மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இப்போது மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் மட்டுமே அமர்கிறார்கள். முன்பு யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளை எழுதினர்.

இவ்விரு தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி பெற மாணவர்கள் அக்கறையுடன் படித்தார்கள்.

எந்த பாடத்தில் பின்தங்கி இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டு அந்த பாடத்தில் தேர்ச்சி பெற முழு கவனம் செலுத்தினர்.

இப்போது இவ்விரு தேர்வுகளும் இல்லாததால்  மாணவர்களின் கல்வி செயல்திறன் தொடர்ந்து சரிவடைந்து வருவதும், உண்மையான கல்வித் திறனை மதிப்பிடுவதில் ஆசிரியர்கள் சந்திக்கும் அதிகரித்த சிரமங்களும் கவலைக்கிடமாக உள்ளது.

ஆகவே கல்வியமைச்சு யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் போன்ற இரு முக்கிய தேசியத் தேர்வுகளை மீண்டும் பரிசீலித்து மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மாணவர்களின் திறன்களில் அதிகரித்து வரும் வேறுபாடுகள், வகுப்பறை மதிப்பீடுகளில் முரண்பாடுகள், கல்வி அமைப்பில் பொறுப்புணர்வு குறைவதை காண  முடிகிறது.

தேர்வு அழுத்தத்தை குறைத்து முழுமையான கற்றலுக்கு ஊக்கமளிப்பது என்பதே ஆரம்ப நோக்கமாக இருந்தாலும், முடிவுகள் இதற்கு மாறாக உள்ளன.

மேலும் கல்வி செயல்திறன் குறைதல் பாஹாசா மலாயு, கணிதம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களில் மாணவர்களின் அடிப்படை திறன்கள் குறையத் தொடங்கியுள்ளன.

ஒரே மாதிரியான தேசிய அளவுகோல் இல்லாமல், ஆரம்பத்திலேயே பலவீனங்களை அடையாளம் காணுவது சிரமமாகியுள்ளது.

உண்மையான திறனை மதிப்பிடுவதில் சிரமம்
இப்போது பயன்படுத்தப்படும் வகுப்பறை அடிப்படையிலான மதிப்பீடுகள் மாணவரின் உண்மையான அறிவு அல்லது திறனை பிரதிபலிக்கவில்லை.

தேசிய நிலையான தேர்வு இல்லாமல், பள்ளிகளுக்கிடையே மதிப்பீட்டு முறைகள் சீராக இல்லை .

தெளிவான கல்வி முன்னேற்றச் சுட்டிக்காட்டிகள் இல்லாமை
தேசியத் தேர்வுகள், மாணவர் முக்கிய கற்றல் நிலைகளில் எவ்வாறு முன்னேறுகின்றனர் என்பதை அளவிடும் ஒரு பொருள் சார்ந்த கருவியாக இருந்தன.

அவற்றின்றி, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவரின் வளர்ச்சியை தெளிவாக அறிய வாய்ப்பு குறைந்துள்ளது.


மாணவர்களில் உந்துதல் மற்றும் ஒழுக்கம் குறைதல்
தேர்வுகள், சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டால், ஒழுக்கம், தொடர்ந்து படிக்கும் பழக்கம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை உருவாக்குகிறது.

ஆக நம்பகமான கல்வி அளவுகோல்கள் இல்லாமல் மலேசியா பின்தங்கும் அபாயம் உள்ளது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset