செய்திகள் மலேசியா
பிரச்சினைகளை எதிர்கொண்டு சவால்களை சமாளித்தால் முன்னேற வாய்ப்பு உண்டு: குலசேகரன் வலியுறுத்து
ஈப்போ:
வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் வரத்தான் செய்யும் அதனை சமாளித்து வந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் மேம்பாடு அடைய வாய்ப்பு உண்டு.
சட்டத் துறை துணையமைச்சர் எம். குலசேகரன் மாணவர்களுக்கு இந்த ஆலோசனையை கூறினார்
இன்று வாழ்க்கையில் முன்னேறியர்வர்களின் பின்னணியை ஆய்வு செய்தால் அவர்கள் எவ்வளவோ பிரச்சனைகளை எதிர்கொண்டு முன்னுக்கு வந்தவர்களாத்தான் இருப்பார்கள்.
அந்த வகையில் தாம் வழக்கறிஞர் துறையில் கல்வியை மேற்கொள்ள எதிர்கொண்ட பிரச்சினைகளை தெரிவித்தார்.
இங்குள்ள கிந்தா இந்தியர சங்க மண்டபத்தில் யூனிதார் கல்லுரி மாணவர்கள் 16ஆவது ஆண்டாக நடத்திய வசந்தம் கலை இரவு நிகழ்வை தொடக்கி வைத்த நிகழ்வில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். குலசேகரன் இவ்வாறு பேசினார்.
அரசாங்கம் மாணவர்கள் தங்கு தடையின்றி கல்வியை தொடர கல்வி நிதி உதவி மற்றும் உயர்க் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு கடனுதவியையும் வழங்கி வருகிறது.
அந்த வாய்ப்புகளை முறையே பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
கல்வியை சிறந்த முறையில் மேற்கொள்ள இயலாத மாணவர்கள் தொழில் துறையை கல்வியை மேற்கொள்ளவும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது அதனையும் முறையே பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வை நடத்துவதின் நோக்கம் மாணவர்களின் உறவுகளை வலுப்படுவது மற்றும் இதன் வழி வசதி குறைந்த மாணவர்கள் மற்றும் வசதி குறைந்த மக்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகள் வழங்குவது என்று யுனித்தார் கல்லூரியின் ஆலோசகர் எம் . இளங்குமாரன் கூறினார்.
இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியின் மத்திய நிர்வாகி முனைவர் கோகிலதா,வர்த்தக பிரமுகர்களான டத்தோ அமாலுடின், நாகராசி கடை உரிமையாளர் பிரகாஷ் உட்பட பலர் கலத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக குழுத் தலைவராக கணேஷ்வரன் செயல் பட்டார் என்பது குறிப்பிடக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 23, 2025, 4:42 pm
முதன் முறையாக ஆயிரக்கணக்கானோர் திரண்ட S.I.R.A.T இளைஞர் உச்சி மாநாடு
November 23, 2025, 3:19 pm
மலேசியா-இந்தியா உறவுகளை வலுப்படுத்த டத்தோஸ்ரீ அன்வாரும் மோடியும் உறுதி கொண்டுள்ளனர்
November 23, 2025, 3:15 pm
சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த கடுமையான நடவடிக்கை அவசியம்: டத்தோ லோகபாலா
November 23, 2025, 3:14 pm
வரலாற்றுப்பூர்வ கிந்தா இந்தியர் சங்கத்திற்கு பேரா ராஜா மூடா வருகை அளித்தார்
November 23, 2025, 3:13 pm
யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளை மீண்டும் அமுல்படுத்துகள்: கல்வி அமைச்சுக்கு பிபிபி கட்சி வேண்டுகோள்
November 23, 2025, 2:46 pm
தாய்லாந்து, கம்போடியா எல்லைப் பிரச்சினையில் மலேசியா தலையிடாது: பிரதமர் அன்வார்
November 23, 2025, 1:13 pm
மோயோக் தொகுதி வேட்பாளர் ரெமிஸ்டா ஜிம்மி சபா மக்களின் குரலாக ஒலிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
November 23, 2025, 1:07 pm
