நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹட்யாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை மீட்க கனரக வாகனங்களைத் தயார்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது: ஜாஹித்

கோலாலம்பூர்:

ஹட்யாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை மீட்க கனரக வாகனங்களைத் தயார்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

ஹட்யாயில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து மலேசியர்கள் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.

அங்குள்ள மலேசியர்களை மீட்க வெளியுறவு அமைச்சு, தாய்லாந்து அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் கனரக வாகனங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

சொங்க்லாவில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் மூலம் பிராந்தியத்தில் வெள்ள நிலைமை குறித்த சமீபத்திய தகவல்களையும் மலேசியா பெறும்.

சொச்ங்க்லாவில் உள்ள எங்கள் தூதரகத்திடமிருந்து சமீபத்திய தகவல்களைப் பெறுவோம்.

மேலும் வெளியுறவு அமைச்சுடனும் தாய்லாந்து அரசாங்கத்துடனும் சொங்க்லா மாநிக ஆளுநருடனும் ஒருங்கிணைப்பு செய்யப்படும்.

இதனால் அவர்களுக்கு நாங்கள் உதவி வழங்க முடியும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset