நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த கடுமையான நடவடிக்கை அவசியம்: டத்தோ லோகபாலா

கோலாலம்பூர்:

மலேசியாவில் சட்டவிரோத போதைப்பொருள் பரவலும்,   சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இதனை வலியுறுத்தினார்.

தற்போது  மலேசிய இளைஞர்களிடையே போதைப் பொருள்  பயன்பாடு அதிகரித்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அரசின் முயற்சிகள் தொடர்ந்தாலும், நிலைமை குறையாமல் மேலும் மோசமடைந்து வருகிறது.

அண்மையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் பற்றிய தகவலை வெளியிட்டார்.

கோத்தா கினாபாலுவில் சபா ஊடகத்துடன் நடத்திய காலை உணவு உரையாடலில், இந்த கும்பல் குறித்து இருபது ஆண்டுகளாகக் கேள்விப் பட்டிருந்ததாகவும், பொறுப்புடைய முகமைகளிடம் இதை முன்வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த வெளிப்பாடு அமலாக்க குறைபாடுகளையும், பொறுப்புணர்வு  பற்றாக்குறையையும் வெளிப்படுத்துகிறது.

மலேசியா இனி துணிச்சலான, கடுமையானநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய  நேரம் வந்துவிட்டது என்றார்.

மலேசியாவிற்கு தற்போது அவசரமாகத் தேவையானவை.

வலுவான எல்லை பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset