நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரலாற்றுப்பூர்வ கிந்தா இந்தியர் சங்கத்திற்கு பேரா ராஜா மூடா வருகை அளித்தார்

ஈப்போ:

பேரா கிந்தா இந்தியர் சங்கத்திற்கு பேரா ராஜா மூடா  மேன்மை தங்கிய ராஜா ஜப்பார் ராஜா மூடா மூசா சிறப்பு வருகை புரிந்தார்.

இந்த சங்கம் கடந்த 118 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்களின் நலன் காக்க தோற்றுவிக்கப்பட்ட இயக்கமாக  தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

பல தலைவர்கள் வழி நடத்தப்பட்ட இந்த இயக்கம்மறைந்த தலைவர் சௌந்திரபாண்டியன் தலைமையில் இங்கு சுமார் ஆயிரம் பேர் அமரக் கூடிய பிரமாண்டமான மண்டபம் பொதுமக்கள், சமுக அமைப்புகள், தலைவர்கள் வழங்கிய ஆதரவோடு  உருவாக்கப்கட்டு தொடர்ந்து வழி நடத்தபட்டு வருகிறது.

இந்த வரலாற்றுப்பூர்வ கிந்தா இந்தியர் சங்க இயக்கத் தலைவர் டத்தோ ஆர். தங்கராஜா அழைபின் போரில்  இந்த மண்டபத்தில் நடத்தப்பட்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் ராஜா மூடா சிறப்பு வருகை புரிந்தது சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கு பெரும் மகிழ்சியை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வில் இசை நிகழ்வுடன், ஆடல் பாடலுடன் விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வர்த்தக பிரமுகர் டத்தோ ஏ.கே. தேவராஜ்  10 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில்  பேரா மாநில மஇகா தலைவர் டான்ஸ்ரீ இராமசாமி ம், டத்தோ நரான் சிங், செல்லப்பா கேட்டரிங் உரிமையாளர் விக்னேஸ்வரன், பேரா மாநில மஇகா முன்னாள் தலைவர்  டத்தோ இளங்கோ உட்பட் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிந்தா இந்தியர் சங்கத் தலைவர் டத்தோ ஆர். தங்கராஜா,

கிந்தா இந்தியர் சங்க மண்டபத்திற்கு ராஜா மூடா அவர்கள் வருகை அளித்தது ஒரு வரலாற்றுப்பூரவ பதிவு என்றார்.

இந்த சங்கம் தொடங்கி 118 ஆண்டு ஆகிறது. இது வரை யாரும் அரச குடும்பத்தில் இருந்து வருகை அளித்தது இல்லை என்றார்.

இந்த சங்கம் பெயரவில் மட்டும் இயங்கவில்லை மாறாக இந்த சங்கத்தின் வழி பல சிறந்த கால் பந்து் விளையாட்டாளர்களை உருவாக்கியுள்ளது.

மேலும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவுவது, தேர்வுக்கு தயாராகும்  இந்திய மாணவர்களுக்குங தன்முனைபு கருத்தரங்கு நிகழ்வுகளை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

கிந்தா இந்தியர் சங்க மண்டபத்திற்கு அருகில் உள்ள மூன்று மாடிக்கொண்ட கட்டடத்தில்   பல சமுக நல நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கும் தகவலையும் டத்தோ தங்கராஜா  தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset