நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கவிஞர் மலர்விழியின் கவிதைத் திறன் பாராட்டுக்குரியது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

கவிஞர் மலர்விழியின் கவிதைத் திறன் மிகவும் பாராட்டுக்குரியது.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

இளம் வயதிலேயே இலக்கியத்தின் வாசனை அறிந்த கவிஞர் மலர்விழி தி.ப.செழியன் அவர்களின் முதல் படைப்பான “நிலவாற்றுப்படை” கவிதை நூலை தலைமையுரையாற்றி வெளியீடு செய்ததில் மகிழ்ச்சி.

புதுக்கவிதையின் வழியில் தன்னுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் நயமாகப் பின்னி எழுதும் இவரின் கவிதைத் திறன் பாராட்டுக்குரியது. 

நிலவாற்றுப்படை எனும் தலைப்பே வித்தியாசமாக இருந்தது.

மலர்விழியின் கவிதைகளில் சொற்களை கையாண்ட விதமும், கருத்துகளும், ஆழ்மனதின் அழுத்தங்களும் அற்புதமாக வெளிப்பட்டுள்ளன.
 
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset