செய்திகள் மலேசியா
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 'தந்தை மனம்’ கல்வி உபகாரச் சம்பளத் திட்டம்; 100 மாணவர்களின் கல்வி எதிர்காலத்துக்கு புதிய ஒளி: சுரேன் கந்தா
பெட்டாலிங்ஜெயா:
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 'தந்தை மனம்’ கல்வி உபகாரச் சம்பளத் திட்டம் 100 மாணவர்களின் கல்வி எதிர்காலத்துக்கு புதிய ஒளியாக அமையவுள்ளது.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.
ஸ்ரீ முருகன் நிலையத்தின் தனது முக்கிய வருடாந்திர நிகழ்வான தேசிய அமைப்பாளர் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
இந்த நிகழ்வு, அடுத்த ஆண்டிற்கான செயல்திட்டங்கள், உத்திமுறைகள் மற்றும் இலக்குகளை வடிவமைப்பதில் மிக முக்கியப் பங்காற்றியது.
நிறைவும் தாக்கமும் கொண்ட ஓர் ஆண்டை நினைவுகூர்ந்து பார்க்கும் போது, ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் அதன் அனைத்து அமைப்பாளர்கள், தன்னார்வாலர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கு, மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
அவர்களின் அயராத அர்ப்பணிப்புகள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இலட்சியத்தைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது.
தேசிய அமைப்பாளர் கூட்டம் 2026, அனைத்துப் பகுதிகளின் கலந்துரையாடலாகவும் வியூகத் திட்டமிடலுக்கான ஓர் இன்றியமையாத களமாகவும் செயல்பட்டது.
தேசிய அமைப்பாளர் சந்திப்பு கூட்டத்தின் போது ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பெருமையுடன் ஒரு மைல்கல் திட்டத்தை வெளியிட்டது.
அது தகுதியான மாணவர்கள் ஸ்ரீ முருகன் கல்வி மையங்களில் தங்கள் கல்வியைத் தொடர வலியுறுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட "தந்தை மனம்" எனும் திட்டமாகும்.
இந்தத் திட்டம் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜாவின் நிலைத்த பார்வையையும் பிரதிபலிக்கிறது.
இத்திட்டம் நிதி உதவியையும் கல்வித் திறனுக்கான ஊக்கத்தையும் வழங்குகிறது.
122,000 ரிங்கிட் மதிப்புள்ள இந்த முயற்சி 100 இந்திய மாணவர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்.
இதன் மூலம், அவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கும், வெற்றி பெறுவதற்கான தங்கள் திறனை வளர்ப்பதற்கும் வழிவகுக்கும்.
இத்திட்டம் கல்வி வளர்ச்சியை வளர்ப்பதிலும், சமூக மேம்பாட்டை ஆதரிப்பதிலும், வாழ்க்கையை மாற்றியமைக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
2026- ஆண்டுக்கான ஶ்ரீ முருகன் நிலையத்தின் நிகழ்வுகளின் முதல் அங்கமாக நாடு முழுவதும் உள்ள வகுப்புகள் ஜனவரி 4 அன்று மீண்டும் தொடங்கும்.
இது ஓர் உற்சாகமான புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
வரவிருக்கும் அமர்வுகள், கல்வித் திறன், குணநலன் உருவாக்கம் மற்றும் எதிர்காலத் திறன்களை வளர்ப்பதை வலியுறுத்தும் ஸ்ரீ முருகம் கல்வி நிலையத்தன் அடிப்படை விழுமியங்களைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று சுரேன் கந்தா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 22, 2025, 10:03 pm
கிளந்தானில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முதல் கடுமையான மழை பெய்யும்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 22, 2025, 2:09 pm
நீர் மட்டம் உயர்கிறது; உணவுப் பொருட்கள் தீர்ந்து போகின்றன: ஹட்யாய் வெள்ளத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள்
November 22, 2025, 2:08 pm
கம்போடியாவில் கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
November 22, 2025, 2:08 pm
தாயார் இந்திரா காந்தியிடம் மகள் பிரசன்னாவை ஒப்படையுங்கள்: மஇகா இளைஞர் அணி
November 22, 2025, 11:33 am
கார்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூன்று வயது சிறுமி உயிரிழந்தார்: போலிஸ்
November 22, 2025, 11:18 am
மகளை மீட்க போராடும் இந்திரா காந்திக்கு நீதி கிடைக்கக் கோரி ஆயிரக்கணக்கானோர் தலைநகரில் கூடினர்
November 22, 2025, 10:58 am
