நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயங்களை இடிப்பதாக மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுங்கள்: சட்டத்துறை தலைவருக்கு அமைச்சர் கோபிந்த் சிங் வேண்டுகோள்

கோலாலம்பூர்:

நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்களை ஒருதலைப்பட்சமாக இடித்துத் தரைமட்டமாக்கப்போவதாக மிரட்டல் விடுத்து வரும் நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை தலைவர் உடனடியாகத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

 ஜசெக தேசியத் தலைவரும்  இலக்கவியல் துறை அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ இதனை வலியுறுத்தியுள்ளார்.

ஆலயங்கள் அமைந்திருக்கும் நில அந்தஸ்து தொடர்பான சிக்கல்களுக்கு பெரும்பாலான மாநிலங்கள் சட்ட ரீதியாகவும் சுமுகமான முறையிலும் தீர்வு காணும் கட்டமைப்புகளைக் கொண்டிருந்தாலும்,

சில தரப்பினர் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது.

முறையான விண்ணப்பங்கள், பேச்சுவார்த்தைகள் மூலம் பல இடங்களில் இப்பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இத்தகைய மிரட்டல் விவகாரங்கள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட மிரட்டல் பேர்வழிகளுக்கு எதிராகப் பல போலிஸ் புகார்கள் செய்யப்பட்டிருந்தும் இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாதது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த அவர்,

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவை என்பதால் இதில் கூடுதல் கவனம் தேவை என்பதை வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset