செய்திகள் மலேசியா
மீண்டும் அம்னோவுக்கு திரும்ப மாட்டேன்: முக்ரிஸ்
புத்ராஜெயா:
அம்னோ தாம் மீண்டும் திரும்ப போவதில்லை என்று பெஜூவாங் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் கூறினார்.
இதன் மூலம் அவரது முன்னாள் கட்சியுடனான அவரது அரசியல் எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கட்சிக்குத் திரும்புவது குறித்த கேள்வியை ஆச்சரியமான ஒன்று என்று விவரித்தார். ஆனால் எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன்.
இந்தக் கேள்வியால் நான் ஆச்சரியப்பட்டேன். நான் அம்னோவுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை.
நிச்சயமாக இல்லை என்று மூடா, பெஜூவாங் ஆகிய கட்சிகள் இணைந்து அசாம் பாக்கிக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கிய பிறகு அவர் கூறினார்.
அம்னோ அதன் ஸ்தாபனத்தின் பாதையிலிருந்தும் அசல் இலக்கிலிருந்தும் வெகுதூரம் விலகிச் சென்று விட்டது.
இதனால் நான் தொடர்ந்து பெஜூவாங்கில் தொடர்ந்து இருப்பேன்.
இன்று இருக்கும் அம்னோ இதற்கு முன்பு அறியப்பட்ட கட்சி அல்ல. உண்மையில் அம்னோவின் அசல் போராட்டத்தின் உணர்வு இப்போது உண்மையில் பெஜூவாங்கில் உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 12:29 pm
ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க முடியுமா?: பெர்சத்து கட்சிக்கு ஹம்சா சவால்
March 10, 2026, 12:28 pm
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த மலேசிய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்: பெர்மிம்
March 10, 2026, 12:27 pm
திரிசூலத்தை அவமதிப்பு செய்த தமீம் டஹாரி மீது கடும் நடவடிக்கை எடுங்கள்: இராஜன்
March 10, 2026, 12:26 pm
கண் பார்வையற்றோர் ஒற்றுமையாக இருக்கும் போது ஏன் உங்களால் முடியாது: மகேந்திரன் கேள்வி
March 10, 2026, 10:14 am
குப்பைத்தொட்டியில் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
March 10, 2026, 9:55 am
தூதரகத்திலிருந்து தப்பிய ஓடிய வெளிநாட்டு பெண் ஏரியில் சடலமாக கண்டெடுப்பு
March 10, 2026, 9:54 am
