செய்திகள் மலேசியா
கண் பார்வையற்றோர் ஒற்றுமையாக இருக்கும் போது ஏன் உங்களால் முடியாது: மகேந்திரன் கேள்வி
கோலாலம்பூர:
கண் பார்வையற்றோர் ஒற்றுமையாக இருக்கும் போது ஏன் உங்களால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை.
தர்மம் தலை காக்கும் சமூக நல இயக்கத்தின் தலைவர் மகேந்திரன் இக்கேள்வியை எழுப்பினார்.
இப்போது நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்து வருகிறது. இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாம் அனைவரும் மலேசியர்கள். இவ்வளவு நாள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று நமக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள். இதை கேட்கும் போது மனது வலிக்கிறது.
கண் பார்வை இழந்த நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
எங்களிடையே எந்த ஒரு பிரிவினை வாதமும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருக்கிறோம். அவரவர் மதத்தை மதிக்கிறோம்.
ஆனால் இன்று நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் பெரும் வேதனையாக இருக்கிறது.
ஆகவே நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் போது ஏன் உங்களால் முடியாது என்று மகேந்திரன் கேள்வியை எழுப்பினார்.
தர்மம் தலைகாக்கும் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று கண் பார்வையற்றோர் சங்கத்தின் மண்டபத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட கண் பார்வையற்றோர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 12:30 pm
மீண்டும் அம்னோவுக்கு திரும்ப மாட்டேன்: முக்ரிஸ்
March 10, 2026, 12:29 pm
ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க முடியுமா?: பெர்சத்து கட்சிக்கு ஹம்சா சவால்
March 10, 2026, 12:28 pm
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த மலேசிய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்: பெர்மிம்
March 10, 2026, 12:27 pm
திரிசூலத்தை அவமதிப்பு செய்த தமீம் டஹாரி மீது கடும் நடவடிக்கை எடுங்கள்: இராஜன்
March 10, 2026, 10:14 am
குப்பைத்தொட்டியில் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
March 10, 2026, 9:55 am
தூதரகத்திலிருந்து தப்பிய ஓடிய வெளிநாட்டு பெண் ஏரியில் சடலமாக கண்டெடுப்பு
March 10, 2026, 9:54 am
