செய்திகள் மலேசியா
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த மலேசிய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்: பெர்மிம்
புத்ராஜெயா:
மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நீடித்து வரும் மோதல் சூழ்நிலையை குறித்து பெர்மிம் பேரவை பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு மகஜரை சமர்ப்பித்துள்ளது.
அந்த மகஜரில், தற்போதைய போர் நிலைமை உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், குறிப்பாக இந்த புனிதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம் உம்மாவின் நலன், பாதுகாப்பு பாதிக்கப்படுவதாகவும் பெர்மிம் மிகவும் வருந்துகிறது.
மத்திய கிழக்கு பகுதியில் உருவாகும் இந்த பதற்றம், உலக பொருளாதாரம், மனிதாபிமான நிலைகளிலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடாக இருந்து வருவதால் , ஐக்கிய நாடுகள் அமைப்பின் வழியாக நடுவர் பங்கு வகித்து, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மலேசிய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளது.
மேலும், போர் பதற்றம் அதிகரிப்பது இந்த காலகட்டத்தில் உலக சமூகத்திற்கு ஏற்றதல்ல என்றும், மனித உயிர்களின் பாதுகாப்பே முதன்மை ஆக வேண்டும் என்றும் அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைதியை முன்னிறுத்தும் மலேசியாவின் வெளிநாட்டு கொள்கைக்கு இணங்க, இந்த விவகாரத்தில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும் என பெர்மிம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக அதன் தவைவர் முஹம்மது அஸ்மான் ஷாஹ் கூறினார்.
பெர்மிம் பேரவையில் மலேசியா முழுவதும் அறுபதுக்கு மேற்பட்ட இணைப்பு சங்கங்கள் இருப்பதையும் மலேசியா இந்தியா முஸ்லிம்களின் நிலைப்பாடு மேலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் வலியுறுத்துதப்பட்டதாக அஸ்மான் ஷாஹ் கூறினார்.
அரை மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் பெர்மிமின் உதவித் தலைவர் ஜரினா, உதவி பொருளாளர் டத்தின் சபரினா ஆகியோர்கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 12:30 pm
மீண்டும் அம்னோவுக்கு திரும்ப மாட்டேன்: முக்ரிஸ்
March 10, 2026, 12:29 pm
ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க முடியுமா?: பெர்சத்து கட்சிக்கு ஹம்சா சவால்
March 10, 2026, 12:27 pm
திரிசூலத்தை அவமதிப்பு செய்த தமீம் டஹாரி மீது கடும் நடவடிக்கை எடுங்கள்: இராஜன்
March 10, 2026, 12:26 pm
கண் பார்வையற்றோர் ஒற்றுமையாக இருக்கும் போது ஏன் உங்களால் முடியாது: மகேந்திரன் கேள்வி
March 10, 2026, 10:14 am
குப்பைத்தொட்டியில் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
March 10, 2026, 9:55 am
தூதரகத்திலிருந்து தப்பிய ஓடிய வெளிநாட்டு பெண் ஏரியில் சடலமாக கண்டெடுப்பு
March 10, 2026, 9:54 am
