நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாட்டிற்காக டத்தோ சிவக்குமார் தலைமையிலான பேராளர் குழுவினர் கம்போடியா சென்றடைந்தனர்

கம்போடியா:

கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாட்டிற்காக டத்தோ சிவக்குமார் தலைமையிலான பேராளர் குழு கம்போடியா சென்றடைந்தது.


கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு இன்று தொடங்கி 26ஆம் தேதி வரை கம்போடியா சியாம் ரீப்பில் நடைபெறவுள்ளது.

அங்கோர் தமிழ்ச் சங்கமும் தென்கிழக்கு ஆசிய பல்கலைக்கழகமும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர்.

உலகப் பேரரசன் இராஜேந்திர சோழன் கடாரம் வென்ற 1000ஆவது ஆண்டு விழா இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக உள்ளது.

உலக நாடுகளில் இருந்து பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

டான்ஸ்ரீ ரடராஜா தலைவராக கொண்டுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் பேராளர்கள் குழு இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

தேவஸ்தானத்தின் அறங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ சிவக்குமார் தலைமையில் இக்குழு கம்போடியா சென்றடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset