நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேமரன்மலைகளில் குடிநுழைவு அதிகாரிகள் அதிரடி சோதனை: 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது

கேமரன்மலை:

கேமரன் மலை சுற்று வட்டாரங்களில் குடிநுழைவு அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.

இதில் 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர் என்று அதன் இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷபான் கூறினார்.

நேற்று நடத்தப்பட்ட ஓப்ஸ் கெம்பூரில் பல்வேறு குடியேற்ற குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 468 அந்நிய நட்டினர் கைது செய்யப்பட்டனர்.

வணிகப் பகுதிகள், கட்டுமானப் பகுதிகள்,  காய்கறி தோட்டங்கள் உள்ளிட்ட மலைப்பகுதிகளைச் சுற்றியுள்ள நான்கு மண்டலங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 547  குடிநுழைவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சோதனைகளில் ஈடுப்பட்டனர்.

பெரும்பாலான வெளிநாட்டினர் காய்கறிகளை பேக் செய்வது உட்பட விடாமுயற்சியுடன் வேலை செய்வதைக் கண்டறிந்தது.

எனவே அதிகாரிகளின் இருப்பு அவர்களுக்குத் தெரியாது. இதனால் அவர்கள் தப்பிக்க நேரம் இல்லை.

இங்குள்ள சமூகத்தினரிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பே சோதனைகள் திட்டமிடப்பட்டிருந்தன.

கிட்டத்தட்ட 1,886 அந்நிய நாட்டினரிடம் சோதனை செய்யப்பட்டது.

காலாவதியான பாஸ்கள், பயண ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குடியேற்ற குற்றங்களுக்காக 468 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

சிலர் போலியானவை என சந்தேகிக்கப்படும் தற்காலிக பணி வருகை பாஸ்களையும் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட அந்நிய நாட்டினரில் 175 மியான்மார் நாட்டினர், வங்காளதேசம் (174), இந்தோனேசியா (67), நேப்பாளம் (20), பாகிஸ்தான் (16), இந்தியா (11), பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இலங்கை, சீனா, கம்போடியாவைச் சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

இதில் 388 ஆண்கள், 76 பெண்கள், நான்கு குழந்தைகள் அடங்குவர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset