நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூரில் மலேசியரான சாமிநாதனுக்கு எதிரான தூக்குத் தண்டனை நவம்பர் 27இல் நிறைவேற்றப்படும்

கோலாலம்பூர்:

அடுத்த வாரம் மற்றொரு மலேசியர் தூக்கிலிடப்பட உள்ளார் என்று சிங்கப்பூர் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு மலேசியரான சாமிநாதன் செல்வராஜு நவம்பர் 27 அன்று தூக்கிலிடப்படுவார்.

தட்சிணாமூர்த்தி, பன்னீர் செல்வம் ஆகிய இரண்டு மலேசியர்கள் சமீபத்திய மாதங்களில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் சிறைச்சாலையின் மூத்த உதவி இயக்குநர் லிம் லே கிம் அனுப்பிய கடிதத்தில்,

வரும் நவம்பர் 26 வரை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சாமிநாதனின் குடும்பத்தினரை நீட்டிக்கப்பட்ட வருகைகளுக்கு அதிகாரிகள் அனுமதிப்பதாகக் கூறினார்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு, குடியரசின் போதைப்பொருள் துஷ்பிரயோகச் சட்டத்தின் ஒரு விதிக்கு எதிரான அரசியலமைப்பு ரீதியான சவாலை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset