செய்திகள் இந்தியா
இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை
டெல்லி:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று(நவ.19) கொண்டாடப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அவரது பிறந்த நாளையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அவரது உருவப்படங்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தில்லியில் உள்ள சக்தி ஸ்தலத்தில் அவரது நினைவிடத்தில் அவரின் பேரனும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
