செய்திகள் இந்தியா
மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவன்: தோற்றதால் எட்டு பேருக்கு பங்கு வைத்த கணவன் கைது
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர் 24-ல் திருமணம் செய்து கொண்டேன். அப்போதே குடிபோதையில் என்னை வைத்து சூதாட ஆரம்பித்துவிட்டார். எதிர்த்து கேட்டதற்கு அவரும், என்னுடைய மாமியாரும் சேர்ந்து அடித்து உதைத்தனர்.
என் கணவர் சூதாட்டத்தில் தோற்றதால் எட்டு பேர் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். பலமுறை அபார்ஷன் செய்ததுடன், ஆசிட் ஊற்றியும், ஏரியில் தள்ளியும் கொலை செய்ய முயன்றனர்’’ என்றார்.
உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் பினோலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
