நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ அன்வாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க எத்தியோப்பியா பயணம் மலேசியா-ஆப்பிரிக்கா உறவுகளை வலுப்படுத்துகிறது

புத்ரா ஜெயா:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க எத்தியோப்பியா பயணம் மலேசியா-ஆப்பிரிக்கா உறவுகளை வலுப்படுத்துகிறது.

எத்தியோப்பியாவிற்கான மலேசியாவின் இடைக்கால தூதர் அபாண்டி அபு பக்கார் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று முதல் நவம்பர் 20 வரை எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார்.

இது ஆப்பிரிக்க நாட்டிற்கு மலேசியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஜீஸ், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா, மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோர் பிரதமருடன் சொல்கின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில் மலேசியாவிற்கு பயணம் செய்த எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மது அலியின் அழைப்பைத் தொடர்ந்து இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset