நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலச்சரிவுகள் காரணமாக குவா மூசாங்-ஜெலி சாலை மூடப்பட்டது

குவா மூசாங்:

குவா முசாங்-ஜெலி சாலையில் கிலோ மீட்டர் 11.95இல் ஏற்பட்ட புதிய நிலச்சரிவு காரணமாக, அச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

குவா மூசாங் போலிஸ் தலைவர் ஃபூ இதனை கூறினார்.

திங்கட்கிழமை இரவு சுமார் 7.48 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தனது துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.

பணியில் இருந்த அதிகாரிகள் பொதுப்பணித் துறை, சாலைப் பராமரிப்பு ஆணையத்திடம் சாலையை மூடி எச்சரிக்கை பலகைகளை நிறுவுமாறு தெரிவித்தனர்.

சாலை மேற்பரப்பில் குப்பைகள் நகர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. 

தற்போது, ​​சாலையில் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது.

எந்தவொரு உயிரிழப்புகளோ அல்லது சேதமோ பதிவாகவில்லை.

சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset