நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்: டத்தோஸ்ரீ சைபுடின்

கோலாலம்பூர்:

நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 134,916 நபர்கள் போதைப்பொருள், சட்டவிரோத போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது

இதில் பெரும்பாலானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலில், 97,329 நபர்கள் அதாவது 72.15 சதவீதம் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.

இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில், குறிப்பாக இளைஞர்களிடையே, தடுப்பு, அமலாக்கம், மீட்பு திட்டத்தின் கீழ் பல முயற்சிகள் உள்ளன.

குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், சமூகங்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை குறிவைத்து பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துவது இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset