நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேமுவை விட்டு வெளியேறுவதில் மஇகா சரியான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ தேவமணி

கோலாலம்பூர்:

தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதில் மஇகா சரியான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.

மஇகாவின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ தேவமணி கூறினார்.

மஇகா தேசிய முன்னணியை விட்டு வெளியேற இழுபறியில் ஈடுபடுவதாக நான் பார்க்கவில்லை.

மாறாக முடிவை அறிவிப்பதற்கு முன்பு கட்சி சரியான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.

பேராளர்கள் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு ஒரு முடிவை எடுக்க ஆணையை வழங்கியது.

கட்சி அடிமட்ட உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முன்பு உரிய செயல்முறையை பின்பற்ற வேண்டும்.

பொதுக் கூட்டத்தின் போது மஇகாவில் 1,700 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் தேசிய முன்னணியை விட்டு வெளியேற ஒரு தீர்மானத்தை முன்வைத்தனர்.

மேலும் மத்திய செயற்குழுவிற்கு ஒரு முடிவை எடுக்க ஒரு ஆணையை வழங்கினர்.

அதுதான் மஇகாவில் உள்ள ஜனநாயக செயல்முறை.

இந்தக் குழு ஒரு செயல்முறை மட்டுமே. கட்சி இழுபறியில் ஈடுபட விரும்புவதால் அல்ல என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset