நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குஸ்கோப் நிதி திட்டங்களின் கீழ் 12,645 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ  ரமணன்

கோலாலம்பூர்:

குஸ்கோப் நிதி திட்டங்களால் கிட்டத்தட்ட 12,645 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றனர்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

கடந்த 2024 முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் மொத்தம் 249.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு நிதித் திட்டங்களால் மொத்தம் 2,645 இந்திய தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.

இந்த முயற்சிகளில் இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (ஸ்பூமி), இந்திய பெண்கள் அதிகாரமளிப்புக்கான சிறப்பு நிதி (பெண்), பேங்க் ரக்யாத் இந்திய தொழில்முனைவோர் நிதி  (பிரிவ்-ஐ), எஸ்எம்இ வங்கியின் இந்திய தொழில்முனைவோருக்கான வாணிகம் நிதி ஆகியவை அடங்கும்.

தேசிய தொழில்முனைவோர் கொள்கை 2030 உள்ளடக்கிய, சீரான நிலையான சமூக பொருளாதார வளர்ச்சியை வலியுறுத்தும் மலேசிய மதானியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, 

இந்திய தொழில்முனைவோர் உட்பட நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோரை மேம்படுத்துவதில் குஸ்கோப் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

ஸ்பூமி, பெண், பிரிவ்-ஐ, வணிகம் உள்ளிட்ட இந்திய தொழில்முனைவோருக்கான முன்முயற்சிகளை செயல்படுத்துவதன் நிலை குறித்து  சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset