நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேமுவை விட்டு மஇகா வெளியேறும் அந்த தருணம் வரும்; கவலைப்பட வேண்டாம்: டத்தோ அசோஜன்

கோலாலம்பூர்:

தேசிய முன்னணியை விட்டு மஇகா வெளியேறும் அந்த தருணம் நிச்சயம் வரும்.

புவாட் கவலைப்பட வேண்டாம் என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ அசோஜன் கூறினார்.

தேசிய முன்னணியை விட்டு மஇகா வெளியேறுவது குறித்து அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ புவாட் ஸர்காசி சாடியுள்ளார்.

இதனை கடுமையாக சாடிய டத்தோ அசோஜன்,  மஇகாவின் உள் விவகாரங்களில் அவர்  தலையிடக்கூடாது.

அவரின் அறிக்கை  குழந்தைத்தனமானது என்று அவர் கூறினார்.

அம்னோ அதன் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை கூடுதல் உத்தரவு பிரச்சினையில் காப்பாற்ற முடியவில்லை.

இதனால் இந்திய சமூகத்தின் நலனை அது எவ்வாறு கவனித்துக் கொள்ள முடியும்?

ஜொகூர் சட்டமன்ற  உறுப்பினராக இருக்கும் புவாட் அங்குள்ள இந்திய சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

ஆக அவர் மஇகா விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என ஜொகூர் மஇகாவின் தலைவரான டத்தோ அசோஜன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset