நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தந்தையுடன் துபாயில் உள்ள தேவித்ராவின் குழந்தையை மீட்க போலிசார் தவறி விட்டனர்: வழக்கறிஞர் சாடல்

கோலாலம்பூர்:

தந்தையுடன்  துபாயில் உள்ள தேவித்ராவின் குழந்தையை மீட்க
போலிசார் தவறி விட்டனர்.

வழக்கறிஞர் ஆர். ரேணுகா ராமையா இதனை தெரிவித்தார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்பட்ட நான்கு வயது சிறுமி தனது தந்தையுடன் துபாயில் வசித்து வருவதற்கான தெளிவான ஆதாரங்கள் இருந்தபோதிலும் போலிசாரின் நடவடிக்கை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பராமரிப்பு தகராறில் மையமாக இருந்த நான்கு வயது கிருஷ்ணா கண்ணன், செப்டம்பர் 2023 இல் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெற்றோர் வருகையின் போது அழைத்துச் செல்லப்பட்டார்.

குழந்தையை மீட்க அவரது தாயார் வி. தேவித்ரா, உயர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றார்.

மேலும் மீட்பு உத்தரவு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்படும் என்று போலிசார் உறுதிப்படுத்தியதாக ரேணுகா ராமையா தெரிவித்தார்.

இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தந்தையின் இறுதி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், குழந்தை துபாயில் இருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

இருந்தபோதிலும், போலிசார் இன்டர்போல் அறிவிப்பை வெளியிடவில்லை

அந்த அறிவிப்பு இல்லாமல், வெளிநாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாது.

இந்த தாமதம் ஒரு தாயின் துன்பத்தை நீடிக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset