நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்: யுவராஜா குருசாமி

பத்துமலை:

பத்துமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் மாலை அணிவிப்பு வைபவம் மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா இதனை கூறினார்.

இன்று கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஆலயத்தில் காலை கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அதே வேளையில் காலை முதல் பக்தர்கள் திரளாக வந்து மாலை அணிந்து செல்கின்றனர்.

மாலைவரை ஐய்யப்பனுக்கு மாலை அணிவிப்பு நிகழ்வு தொடர்ந்தது. குறிப்பாக சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

ஒவ்வோர் ஆண்டும் அதிகமான பக்தர்கள் முதல் முறையாக மாலை அணிந்து விரதம் இருக்கின்றனர்.

இந்த விரதத்தை பக்தர்கள் முறையாக தொடர்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டி நெறிமுறை தேவை.

இதன் அடிப்படையில் சிறப்பு வழிகாட்டி விளக்கக் கூட்டம் வரும் சனிக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இது கன்னி சாமிகளுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று யுவராஜா குருசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

இதைத் தவிர்த்து ஆலயத்தில் அடுத்த இரு மாதங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

அதே வேளையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உரிய வழிகாட்டல்களை தேவஸ்தானம் வழங்கவுள்ளது.

குறிப்பாக சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக ஆலயத்தில் மூன்று முறை இரு முடி கட்டும் வைபவம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

ஆக பக்தர்கள் இப்பூஜைகளில் கலந்து கொள்ளுமாறு யுவராஜா குருசாமி கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset