நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாக் பெர்னாமில் அன்னிய நாட்டினர் 30 பேரை சிலாங்கூர் போலீசார் கைது

ஷா ஆலம்: 

சனிக்கிழமை (நவம்பர் 15) அதிகாலை 12.15 மணிக்கு சபாக் பெர்னாமின் கடலோரப் பகுதிக்குச் சென்றதாக நம்பப்படும் ஒன்பது பெண்கள் உட்பட 30 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர்.

பந்தாய் சுங்கை பூலாயின் கடலோரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பதிவு செய்யப்படாத படகு நகர்வதை ஒரு போலீஸ் குழு கண்டறிந்து, அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும், அந்தக் குழுவினரின் தலைவனை நிறுத்த உத்தரவிட்டதாகவும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

“விரைவான நடவடிக்கை காரணமாக, 21 முதல் 49 வயதுடைய ஒன்பது பெண்கள் உட்பட 30 வெளிநாட்டினரை போலீசார் அதிரடியாக கைது செய்ய முடிந்தது.

“புலம்பெயர்ந்தோர் கடத்தல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இரண்டு மொபைல் போன்களும் ர்ச்செய்யப்பட்டன,” என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset