நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாம் சட்டமன்ற தொகுதியின் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் போட்டியில் இருந்து விலகினார்

கோத்தா கினபாலு:

சிலாம் சட்டமன்ற தொகுதியின் நம்பிக்கை கூட்டணி  வேட்பாளர் போட்டியில் இருந்து விலகினார்.

சபா கெஅடிலான் தலைவர் முஸ்தபா சக்முத் இதனை தெரிவித்தார்.

17ஆவது சபா மாநிலத் தேர்தல் இம் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் சிலாம் சட்டமன்ற தொகுதியில் நம்பிக்கை கூட்டணி சார்பில் அப்துல் ஹலிம் சிடேக் குலாம் ஹசான் போட்டியிடவிருந்தார்.

ஆனால் அவர் இப்போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

இந்த போட்டியிடுவதிலிருந்து விலகுவதற்கு எந்தவொரு வெளிப்புற அழுத்தமும் இல்லாமல் அவர் தனது சொந்த முடிவை எடுத்துள்ளார்.

சபா கெஅடிலான் உச்சமன்றத்தில் பல்வேறு பரிசீலனைகளை கருத்தில் கொண்டு நம்பிக்கை கூறு கட்சிகள், மாநிலத்தில் உள்ள அரசியல் பங்காளிகளுக்கு இடையே நல்லுறவு, நல்லிணக்கத்தைப் பேணுவது உட்பட அவரின் இந்த முடிவை மதிப்பதாக அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset