நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1.69 பில்லியன் ரிங்கிட் வரி செலுத்தப்படவில்லை: திவால் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த நஜிப், மகன் தவறிவிட்டனர்

கோலாலம்பூர்:

திவால் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த டத்தோஸ்ரீ நஜிப்பும் அவரின் மகனும் தவறிவிட்டனர்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், அவரது மகன் நஜிபுடின் ஆகியோர் திவால் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கக் கோரிய மேல்முறையீடு செய்திருந்தனர்.

அவர்களின் இந்த மேல்முறையீட்டை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த முடிவு, தந்தை-மகன் இருவரும் தங்கள் வரி நிலுவைத் தொகையான 1.7 பில்லியன் ரிங்கிட்டை செலுத்தாவிட்டால், உள்நாட்டு வருவாய் வாரியம் (அவர்கள் மீது திவால்) நடவடிக்கைகளைத் தொடர வழி வகுக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவர்களின் திவால்நிலை அறிவிப்பை நிறுத்தி வைக்க மறுத்த உயர் நீதிமன்ற துணைப் பதிவாளரின் முடிவுக்கு எதிரான அவர்களின் மேல்முறையீட்டை நீதித்துறை ஆணையர் சுஹேந்திரன் சொக்கநாதன் @ சஹேரன் அப்துல்லாஹ் இன்று காலை தள்ளுபடி செய்தார்.

எந்தவொரு பணமும் செலுத்தப்படவில்லை. எனவே அவர்கள் இருவர்க்கும் சம்மன் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

மேலும் நஜிப், நஜிபுடினுக்கு எதிராக சுருக்கமான தீர்ப்பும் வழங்கப்பட்டது. 

மேல்முறையீட்டு நீதிமன்றம் கூட்டாட்சி நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset