நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

சபா வருவாய் 40% கோரிக்கை தொடர்பான நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக பகுதி மேல்முறையீடு செய்வதில், சபா மாநிலத் தேர்தல் ஏஜிசிபரிசீலிக்கும் விஷயங்களில் ஒன்று என்பதை நான் மறுக்கிறேன்.

மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.

ஆனால் தீர்ப்பின் சில காரணங்களில் மேல்முறையீட்டு செயல்முறை மூலம் சரிசெய்யப்பட வேண்டிய சிக்கல்கள் உள்ளன.

அதே வேளையில் இதற்கு மாநிலத் தேர்தல் காரணமாக அல்ல. நாங்கள் முடிவை ஏற்றுக்கொண்டோம்.

அதாவது, தீர்ப்பின் அடிப்படையில் சிக்கல்கள் உள்ளன என்று அவர் இங்கு நடந்த ஒரு நிகழ்விற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset