நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு

கோலாலம்பூர்:

காணாமல் போன எனது மகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், நவம்பர் 22ஆம் தேதி தலைநகரில் நீதி அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

இந்த நீதி அணிவகுப்பில் முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் கலந்து கொள்ள வேண்டும்.

உணர்ச்சிவசப்பட்ட தொனியில் பேசிய இந்திரா  காந்தி,

தெங்கு மைமுன்னை ஒரு முன்னாள் தலைமை நீதிபதியாக அல்லாமல், ஒரு சகோதரியாக, ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, உண்மையின் அடையாளமாக தன்னுடன் சேருமாறு வலியுறுத்தினார்.

நீங்கள் என் பக்கத்தில் நடக்க முடிந்தால், ஒரு சில அடிகள் கூட, அது வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததை விட அதிகமான அர்த்தத்தை அளிக்கும்.

எனக்கு, நீதியும் மனிதநேயமும் இறுதியாக ஒரே பாதையில் சந்திக்கும் நாளாக அது இருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset