நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்

கோலாலம்பூர்:

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்புவது தொடர்பான தகவல்கள் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஆமாவா, உங்களுக்கு யார் சொன்னது என்று இன்று தேசிய மேம்பாட்டு கருத்தரங்கு முடித்த பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சுருக்கமாக பதில் கூறினார்.

முன்னதாக வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில் டத்தோஸ்ரீ அன்வார் அமைச்சரவை மறுசீரமைப்பை அறிவிப்பார் என்று ஊடக இணையதளங்கள் கூறின.

கவனம் செலுத்தப்படும் முக்கிய நியமனங்களில் சுற்றுச்சூழல், நீர் அமைச்சராக கைரியும், சர்வதேச வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தை  டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனியின் அடங்கும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset