நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ

கிள்ளான்:

வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது.

முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ இதனை கூறினார்.

கிள்ளான் பண்டமாரானில் உள்ள கம்போங் ஜாலான் பாப்பானில் வசிக்கும் ஒருவருக்கு, இதுதான் அவர் அறிந்த ஒரே வீடு.

அவர் பிறப்பதற்கு முன்பே அவருடைய தாத்தா அவர்களின் வீட்டைக் கட்டினார்.

இப்போது 17வயதில் அவர் நினைத்துப் பார்க்க முடியாததை எதிர்கொள்கிறார்.

குறிப்பாக அவர்கள் வாழ்ந்து வந்த வீடுகள் உடைக்கப்பட்டது.

மேம்பாட்டுத் திட்டங்களால் அவர்களின் உரிமைகள் மறைக்கப்பட்டுள்ளது.

தாமதப்படுத்தப்பட்ட, மறுக்கப்பட்ட, மற்றும் புல்டோசர் மூலம் நீதி அகற்றப்படுவது என்பது வெறும் உள்ளூர் பிரச்சினை மட்டுமல்ல.

அது ஒரு தேசிய அவமானம் என்பதை சிலாங்கூர் அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.

கம்போங் ஜாலான் பாப்பான் வெறும் ஒரு நிலப்பகுதி அல்ல. அது ஒரு கண்ணாடி.  இன்று அது பிரதிபலிக்கிறது.

அது யாருக்கு சேவை செய்கிறது என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது என்று அவர் கூறினார்.

டான்ஸ்ரீ காலித் மந்திரி புசாராக இருந்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் 90,000 ரிங்கிட் விலைக்கு வழங்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மந்திரி புசாராக இருந்த போதிலும் இது நிலை நிறுத்தப்பட்டது.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தால் அம்முடிவும் வாக்குறுதியும் காற்றில் பறந்து விட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset