நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் ஜாலான் பாப்பான் வீடுகள் உடைப்பு: பிஎஸ்எம் அருட்செல்வம் உட்பட 3 பேர் கைது

கிள்ளான்:

கம்போங் ஜாலான் பாப்பான் வீடுகள் உடைப்பு சம்பவத்தில் பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வம் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிள்ளான் கம்போங் ஜாலான் பாப்பானில் உள்ள வீடுகள் இன்று உடைக்கப்பட்டது.

இந்த  இடிப்புப் பணிகளை எதிர்த்துப் போராடியதற்காக பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ். அருள்செல்வன், மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அருள்செல்வன் தற்போது கிள்ளான் செலாத்தான் போலிஸ் தலைமையகத்தில் குடியிருப்பாளர் பிரதிநிதி எம். லோகேஸ்வரன், ஆர்வலர் எம். மைத்ரேயர் ஆகியோருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு பொது ஊழியரை தனது கடமைகளைச் செய்யத் தடுத்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 இன் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், வீடுகள் முழுமையாக காலி செய்யப்படாமல் இருந்ததால், வீடுகள் இடிக்கப்படுவதைத் தடுக்க மட்டுமே முயற்சிப்பதாக அருட்செல்வன் கூறினார்.

ஏனெனில், பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது இன்னும் குடும்பங்கள் உள்ளே இருந்தன என்றார் அவர்.

இடிப்புப் பணியை இன்னும் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு காவல்துறையினரிடம் கேட்டதற்காக ஆர்வலர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset