நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவை மட்டும் நம்பியிருக்க முடியாது; அரசாங்கத்தில் உள்ள இதர வாய்ப்புகளை ஆராய வேண்டும்: செல்வன் நாகப்பன்

கோலாலம்பூர்:

மித்ராவை மட்டும் நம்பியிருக்காமல் அரசாங்கத்தில் உள்ள இதர வாய்ப்புகளை ஆராய்ந்து பயனடைய வேண்டும்.

கோலாலம்பூர், புத்ராஜெயா இந்திய வர்த்தக தொழிலியல் சபையின் முதன்மை இலக்கு இதுவாகும் என்று அதன்  செயலாளர் செல்வன் நாகப்பன் கூறினார்.

கோலாலம்பூர், புத்ராஜெயா இந்திய வர்த்தக தொழிலியல் சபையின் ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக் கூட்டத்துடன் இணைந்து தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

ஆண்டுக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக உறுப்பினர்கள் பயனடையும் திட்டங்கள், உறுப்பினர்களிடையே நட்புறவு, வர்த்தக உறவை ஏற்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகள் போன்றவை குறித்து விரிவாக பேசப்பட்டது.

குறிப்பாக அரசாங்கத்தில் உள்ள வாய்ப்புகள் (மித்ரா தவிர) இதரவற்றை ஆரய்ந்து அதை உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

காரணம் மித்ராவில் 100 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

இந்நிதியை மட்டும் நம்பியிருக்காமல் அரசாங்கத்தில் உள்ள இதர வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

இந்த வாய்ப்புகளை ஆராய்ந்து அதை உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அதே வேளையில் வெளிநாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளும் உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

2026ஆம் ஆண்டில் இதை இலக்காக கொண்டே கோலாலம்பூர், புத்ராஜெயா இந்திய வர்த்தக தொழிலியல் சபை செயல்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset