நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறையில் மரணமடைந்த திருநாவுக்கரசுக்கு நீதி கிடைக்க வேண்டும்: புக்கிட் அமானில் குடும்பத்தினர் மகஜர்

கோலாலம்பூர்:

சிறையில் மரணமடைந்த திருநாவுக்கரசுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவரின் குடும்பத்தினர் சார்பில் புக்கிட் அமானில் மகஜர் வழங்கப்பட்டது.

நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை கூறினார்.

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி திருநாவுக்கரசு கோல லங்காட் மாவட்ட தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

செப்டம்பர் 14ஆம் தேதி அவர் பந்திங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

செப்டம்பர் 17ஆம் தேதி சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின் அவர் சுங்கைப்பூலோ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். 

இந்நிலையில் திருநாவுக்கரசு செப்டம்பர் 18ஆம் தேதி சிறைச்சாலையில் மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரின் உடல் சவப் பரிசோதனைக்காக சுங்கைபூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சவப்பரிசோதனைக்கு பின் அவரின் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதே வேளையில் அவர் கோல லங்காட் போலிஸ் தலைமையகத்தின் தடுப்பு காவலில் இருந்த போது தாக்கப்பட்டிருக்கலாம் என அவரின் குடும்பத்தார் சந்தேகிக்கின்றனர்.

அதன் அடிப்படையில்தான் அவரின் குடும்பத்தார் சார்பில் புக்கிட் அமானில் இன்று மகஜர் வழங்கப்பட்டது.

திருநாவுக்கரசு மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். 

தேசிய போலிஸ்படைத் தலைவரும் உள்துறை அமைச்சரும் தலையிட வேண்டும்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பில் சுஹாகாமிடமும் மகஜர் வழங்கப்படும் என்று டத்தோ டாக்டர் கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset