செய்திகள் மலேசியா
சிறையில் இருந்து வெளியாகி 2 மாதங்களே ஆன நிலையில் கூசாய் மீண்டும் கைது
சுங்கைப் பட்டாணி:
சிறையில் இருந்து வெளியாகி 2 மாதங்களே ஆன நிலையில் கூசாய் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் இதனை தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு குற்றச் செயலுக்காக சிறையில் இருந்து கூசாய் எனும் ஆடவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனம், கேபிளைத் திருடிய வழக்கில் ஈடுபட்ட பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
21 வயதான உள்ளூர் ஆடவரான சந்தேக நபரிடம் 10 முந்தைய பதிவுகள் உள்ளன.
அவற்றில் ஐந்து போதைப்பொருள் தொடர்பானதும், ஐந்து இதர குற்றப் பதிவுகள் உள்ளன.
கூசாய் என்று அழைக்கப்படும் சந்தேக நபர், கடந்த மாதம் முதல் கோலா மூடா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், உறுப்பினர்களால் ஓப் லெஜாங்கில் மூன்று தனித்தனி சோதனைகளில் 21 முதல் 25 வயதுக்குட்பட்ட அவரது மூன்று நண்பர்களுடன் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர் சம்பந்தப்பட்ட ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்று நம்பப்படுகிறது.
இது குற்றச் செயலைச் செய்ய அவருக்கு தைரியத்தை அளித்தது என்று விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 6:43 pm
ஜம்ரி வினோத் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
March 16, 2026, 6:42 pm
தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி
March 16, 2026, 6:41 pm
பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்
March 16, 2026, 6:01 pm
நான்கு நாள்களில் டாங்கக் மாவட்டத்தில் இரண்டாவது கொலை சம்பவம்
March 16, 2026, 6:00 pm
நோன்புப் பெருநாள் காலத்தில் மலேசியாவின் வானிலை: MetMalaysia முன்னறிவிப்பு
March 16, 2026, 5:30 pm
டாம் ஜெபட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சைஃபுதின் நஸுத்தியான் வெற்றி
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:25 pm
