நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

S.I.R.A.T இளைஞர் மாநாட்டை ஒட்டிய கால்பந்து போட்டியின் ஜெர்ஸி அறிமுகம்

கோலாலம்பூர்:

மலேசியாவின் மிகப் பெரிய இந்திய முஸ்லிம் இளைஞர் ஒன்று கூடல் 2025 நவம்பர் 22 அன்று, பினாங்கு மாநிலத்தின் பட்டர்வொர்த் நகரில் நடைபெற உள்ளது.  

S.I.R.A.T 2025 எனும் முக்மின் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடந்து வருகின்றன.

அந்த மாநாட்டை ஒட்டி சிலாங்கூர் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் அணிக்கும் பினாங்கு இந்திய முஸ்லிம் இளைஞர்கள் அணிக்கும் கால்பந்துப் போட்டி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஜெர்சி அறிமுகத்தை கோலாலம்பூர் செய்யது உணவக மண்டபத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்திய முஸ்லிம் இளைஞர்கள் மாநாடு குறித்தும் கால்பந்து விளையாட்டின் நோக்கம் குறித்தும் முக்மின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் விளக்கினார். 

இந்த மாநாட்டை ஒட்டி நடத்தப்படும் விளையாட்டு வெற்றி தோல்வி என்ற அடிப்படையில் அமைந்தது அல்ல. மாறாக நட்பு முறையிலான ஒற்றுமைக்கான விளையாட்டு இது என்று டத்தோஸ்ரீ அக்மல் தெரிவித்தார்.

டத்தோ சிராஜ், துவான் மன் நூர் உட்பட முக்கிய பிரமுகர்களும் இரு அணியின் விளையாட்டாளர்களும் ஜெர்சி அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset