நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்

கோலாலம்பூர்:

எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது. பிரதமர் துறையின் (சட்டம்) துணையமைச்சர் குலசேகரன் இதனை கூறினார்.

எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் மலேசியாவில் இன்னும் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுவதை போலிசார் உடனசியாக விசாரிக்க வேண்டும். 

காரணம் அவருக்கு எதிராக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு வழக்கு முதன் முதலில் எழுந்தபோது இந்திராவின் முன்னணி வழக்கறிஞராக இருந்தவர் என்ற முறையில்,

ரிதுவான் அப்துல்லா அரசாங்க உதவிகளான பூடி95, ரஹ்மா அடிப்படை தேவைகள் உதவி (சாரா) ஆகியவற்றைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை போலிசார் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.

மேலும் முன்னர் கே. பத்மநாதன் என்று அழைக்கப்பட்ட ரிதுவானுக்கு எதிராக இன்னும் நடைமுறையில் உள்ள அனைத்து நீதிமன்ற உத்தரவுகளையும் அமல்படுத்த போலிஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்தவொரு தாயும் தனது குழந்தையிலிருந்து பிரிக்கப்படக்கூடாது.

தனது இளைய குழந்தை பிரசனாவை கடத்தி, 11 மாதக் குழந்தையாக இருந்தபோது ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட ரிதுவானைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset