செய்திகள் மலேசியா
மலேசிய நகரத்தார்கள் வர்த்தக தொழில் துறைகளில் மீண்டும் முத்திரை பதிக்க வேண்டும்: டத்தோ இராமநாதன்
கோலாலம்பூர்:
மலேசிய நகரத்தார்கள் வர்த்தக தொழில் துறைகளில் மீண்டும் முத்திரை வேண்டும்.
மலேசிய நகரத்தார் சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர். இராமநாதன் இதனை கூறினார்.
பண்டை காலத்தில் குறிப்பாக மலேசிய உட்பட பல நாடுகளில் நகரத்தார்கள் வர்த்தக தொழில் துறைகளில் அதிக ஆர்வம் காட்டினார்.
கோலாலம்பூர் லெபோ அம்பாங் உட்பட பல நகரங்களில் நகரத்தார்கள் வியாபாரத்தில் அதிக ஆர்வம் காட்டினார்.
ஆனால் நாடாவில் அது குறைந்து விட்டது.
மலேசிய நகரத்தார்தள் மீண்டும் வர்த்தக தொழில் துறைகளில் கால் பதிக்க வேண்டும் என்ற இலக்கில் இப்போது மலேசிய நகரத்தார் சங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மலேசியா நாகரத்தார் வாணிப அறம் சார்பாக, மலேசியா–தமிழக வர்த்தக உச்சநிலை மாநாடு நேற்று தலைநகரில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பிரதிநிதிகள், மலேசியாவின் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் முக்கிய வணிக நிகழ்வாக இடம் பெற்றது.
இந்த மாநாடு மலேசியாவில் உள்ள மூன்று முக்கிய இந்திய வணிக அறங்கள் இணைந்து நடத்தப்பட்டது.
மலேசியா நாகரத்தார் வாணிப அறம், கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில் சங்கம் ,
தென்னிந்திய கொங்கு வணிக சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
மலேசியா, தமிழ்நாடு இருதரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்துதல், புதிய தொழில்நுட்ப மற்றும் வணிக கூட்டுறவுகளை உருவாக்கும் நோக்குடன் இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது என்று அவர் குறிப்பிட்டார்.
தொழில்முனைவு அறிவு மற்றும் டிஜிட்டல் புதுமை பரிமாற்றத்தை ஊக்குவித்தல், இரு நாடுகளின் தொழில்முனைவோருக்கிடையிலான வலையமைப்பை விரிவுபடுத்துதல் இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்கள் என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அவர்கள் சிறப்பு வருகை தந்து இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய - இந்திய இடையிலான உறவு தொப்புள் கொடி உறவு என்றும் இரு நாடுகள் இடையே வர்த்தக தொழில் துறைகளில் நமது மலேசியர்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மலேசியாவில் வர்த்தக தொழில் துறைகளில் அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 1:16 pm
இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்
November 5, 2025, 12:53 pm
61 மலேசிய மாணவர்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு: சுற்றுலா முகவர் மீது போலிஸ் விசாரணை
November 5, 2025, 10:35 am
1 எம்டிபி நிதியுடன் நஜிப்பை தொடர்புபடுத்துவதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை: ஷாபி
November 5, 2025, 10:34 am
அமெரிக்காவில் யூபிஎஸ் சரக்கு விமானம் விபத்து: 3 பேர் மரணம்
November 5, 2025, 9:03 am
உட்கட்சி பூசல்களை நிறுத்த பெர்சத்து உச்சமன்றம் முடிவு: மொஹைதின்
November 4, 2025, 11:20 pm
தர்ம மடானி திட்டம்; சமூக ஒற்றுமைக்கும் எதிர்கால நலனுக்கும் குணராஜ் முன்வைத்த அறைகூவலுக்கு மாமன்றம் ஆதரவு
November 4, 2025, 3:21 pm
