நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி நிதியுடன் நஜிப்பை தொடர்புபடுத்துவதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை: ஷாபி

கோலாலம்பூர்:

1 எம்டிபி நிதியுடன் டத்தோஸ்ரீ நஜிப்பை தொடர்புபடுத்துவதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.

டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முதன்மக் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லா இதனை கூறினார்.

1 எம்டிபி வழக்கில் முன்னாள் பிரதமருக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது.

சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதாரங்களை அது நம்பியிருந்தது.

நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுவேரா முன் தனது இறுதி வாதங்களில், முழு வழக்கு விசாரணையும் இரட்டை வதந்தி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது.

அவை எந்த சட்ட விதிவிலக்குக்கும் உட்பட்டவை அல்ல என்றும், முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் முகமது ஷாபி கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு தனது இரண்டு கால்களையும் வெட்டிக் கொண்டுள்ளது.

இப்போது அவர்களுக்கு நிற்க கால்கள் இல்லை.

எனது கட்சிக்காரருக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அனைத்து ஆதாரங்களும் வெறும் வதந்திகள். உண்மைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

சட்டக் கோட்பாடுகள், வெளிநாட்டு நீதித்துறை முடிவுகளின் அடிப்படையில், ஒரு சம்பவத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கைகள், ஒரு இடைத்தரகர் மூலம் தெரிவிக்கப்பட்டவை செல்லுபடியாகும் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று முகமது ஷாபி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset