செய்திகள் மலேசியா
அமெரிக்காவில் யூபிஎஸ் சரக்கு விமானம் விபத்து: 3 பேர் மரணம்
கெண்ட்டக்கி:
அமெரிக்காவின் கெண்ட்டக்கி மாநிலத்தில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் மூவர் மாண்டனர்.
மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
யூபிஎஸ் அஞ்சல் சேவை நிறுவனத்தின் விமானம் Louisville Muhammad Ali அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் விபத்தில் சிக்கியது.
முதலில் இறக்கைப் பகுதியில் தீ மூண்டது. விமானம் பின்னர் கீழே விழுந்ததில் வெடித்தது.
அது நெருப்புப்பந்தைப் போல் காணப்பட்டதாகக் கென்ட்டக்கி ஆளுநர் அண்டி பெஷியர் சொன்னார்.
விமான நிலையத்துக்கு அருகே உள்ள கட்டடங்களுக்கும் தீ பரவியது.
விமான நிலைய வட்டாரத்தில் புகை சூழ்ந்திருப்பதைப் படங்களில் காணமுடிகிறது. தீ இன்னும் எரிகிறது. அதை அணைக்க அதிகாரிகள் போராடுகின்றனர்.
விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அதிகாரிகள் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளனர்.
அஞ்சல் சேவை விமானத்தில் மூவர் இருந்தனர். அவர்கள் அனைவரும் மாண்டதாக நம்பப்படுகிறது.
விமானம் விழுந்த இடத்தில் இருந்தோரும் காயமடைந்துள்ளனர்.
காயமுற்றோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 1:16 pm
இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்
November 5, 2025, 12:53 pm
61 மலேசிய மாணவர்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு: சுற்றுலா முகவர் மீது போலிஸ் விசாரணை
November 5, 2025, 10:35 am
1 எம்டிபி நிதியுடன் நஜிப்பை தொடர்புபடுத்துவதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை: ஷாபி
November 5, 2025, 10:33 am
மலேசிய நகரத்தார்கள் வர்த்தக தொழில் துறைகளில் மீண்டும் முத்திரை பதிக்க வேண்டும்: டத்தோ இராமநாதன்
November 5, 2025, 9:03 am
உட்கட்சி பூசல்களை நிறுத்த பெர்சத்து உச்சமன்றம் முடிவு: மொஹைதின்
November 4, 2025, 11:20 pm
தர்ம மடானி திட்டம்; சமூக ஒற்றுமைக்கும் எதிர்கால நலனுக்கும் குணராஜ் முன்வைத்த அறைகூவலுக்கு மாமன்றம் ஆதரவு
November 4, 2025, 3:21 pm
