செய்திகள் மலேசியா
உட்கட்சி பூசல்களை நிறுத்த பெர்சத்து உச்சமன்றம் முடிவு: மொஹைதின்
கோலாலம்பூர்:
உட்கட்சி பூசல்களை நிறுத்த பெர்சத்து கட்சியின் உச்சமன்றம் கூட்டாக முடிவு செய்துள்ளதாக.
அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.
வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் எந்தவொரு உள் குழப்பத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
இதற்கு பெர்சத்து உச்ச மன்றம் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளது.
நேற்று இரவு பெர்சத்து உச்சமன்றக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இதில் அனைத்து உறுப்பினர்களும் சமீப காலமாக எழும் அனைத்து பிரச்சினைகளையும் முந்தைய சர்ச்சைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஒப்புக்கொண்டனர்.
இதனால் கட்சியின் கவனம் மக்கள் நலனிலும் தேர்தலுக்கான தயாரிப்புகளிலும் தொடர்ந்து இருக்கும்.
கூட்டம் அமைதியாகவும், முழுமையாகவும் நடந்து முடிந்தது. அனைத்து உறுப்பினர்களும் விரைவில் ஒருங்கிணைந்த, வலுவான சபையாக மீண்டும் இணைவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க ஒப்புக்கொண்டனர் என்று டான்ஸ்ரீ மொஹைதின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 10:52 am
மலேசியர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காணப்படும்: பிரதமர் அன்வார் உறுதி
July 26, 2026, 10:44 am
மலாக்கவில் கடுமையான வெள்ளம்
July 25, 2026, 12:44 pm
திரெங்கானு மாநில ஆட்சியாளர் சுல்தான் மிஸான் நலமுடன் உள்ளார்: திரெங்கானு அரண்மனை தகவல்
July 25, 2026, 12:43 pm
